Special: தேர்தல் களம் 2019: "பெரியோர்களே… தாய்மார்களே…, அன்பான வாக்காள பெருமக்களே…”

“பெரியோர்களே… தாய்மார்களே…, அன்பான வாக்காள பெருமக்களே…” என்ற வார்த்தைகள் இனி எட்டுதிக்கும் முழங்ககூடும். ”உங்க ஓட்டு, இந்த சின்னத்திற்கே” என வராத முகங்கள் தேடி வந்து காலில் விழும். இவை 17 வது மக்களவை தேர்தல் திருவிழா முடியும் வரை நடந்தேறும்.


“பெரியோர்களே… தாய்மார்களே…, அன்பான வாக்காள பெருமக்களே…” என்ற வார்த்தைகள் இனி எட்டுதிக்கும் முழங்ககூடும். ”உங்க ஓட்டு, இந்த சின்னத்திற்கே” என வராத முகங்கள் தேடி வந்து காலில் விழும். இவை 17 வது மக்களவை தேர்தல் திருவிழா முடியும் வரை நடந்தேறும். 



தேர்தல் அரசியலை விரும்புவோர் உண்டு என்றாலும், அதை விட்டுவிலகி நிற்பவர்களே அதிகம். 

”பனப்பட்டில இருக்குற நா ஓட்டு போட்டு, எதுக்கு யாரோ ஒருத்தன புதுடில்லிக்கு அனுப்பவும்?”

”கால் கடுக்க வெயில்ல நின்னு ஓட்டு போட்டு என்ன பிரயோஜனம்? நான் ஒருத்தன் ஓட்டு போடலனா என்னாயிட போகுது?”



“அஞ்சு வருசத்துக்கு ஒருக்கா எலெக்சன் வருது, யார்யாரோ வாராங்க, காழுல விழுந்து ஓட்டு வாங்கிட்டு போறாங்க, அதுக்கு அப்புறம் எட்டி கூடபாக்கறதில்ல” 

இந்த வார்த்தைகளைவெறுப்போடு உச்சரிக்க கேட்டிருப்போம். ஆனால், உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என பாடப்புத்தகத்தில் படித்த வரிகளை அவ்வப்போது பெருமிதமாக சொல்லிக்கொள்கிறோம். இந்த பெருமிதம் உயிர்ப்போடு இருக்க ஒரே காரணம், தேர்தல்கள்..!

இந்திய ஜனநாயகத்தை கட்டி காப்பாற்றி வருவது, தொடர்ந்து நடக்கும் தேர்தல்களே. அரசியலை நாம் விரும்பினாலும், விரும்பவில்லை என்றாலும், அது நம் வாழ்வில்தலையீட்டே தீரும். அது தேர்தல்களுக்கும் பொருந்தும். தேர்தலை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளும் உண்டு, எத்தனைதேர்தல் வந்தாலும் போட்டியிடும் சுயேட்சைகளும் உண்டு. நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் சட்டமியற்றும் இடங்களில் அமர்பவர்கள், தேர்தல்கள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களே அடுத்த 5 ஆண்டுகளுக்கான நமது வாழ்க்கை நிலையை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.



சரி தான், தேர்தல் நாளான்று வீட்டில், அப்பாவோ, தெரிந்தவர்களோ சொன்னதை கேட்டோ, வாங்கிய காசுக்கு வாக்களித்த பின்னரோ, இடது கை மையினை காட்டியபடி, பெருமிதமும், மகிழ்ச்சியும் பொங்க ஒரு செல்பி எடுத்து, நமது ஜனநாயக கடமையை முடித்து விட்டோம் என ஆறுதல் கொள்ளலாமா?. நாம் வாக்களித்த நபர் வெல்ல வேண்டுமென்ற ஆசையும், ஆர்வமும் அனைவருக்கும் இருக்கும். ஆனால் நாம் வாக்களித்தது தகுதியான நபருக்கு தானா? வாக்களித்து அனுப்பும் பிரதிநிதி நமது குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டாமா? வேண்டும், என்பதை அனைவரின் ஆசையாகவும் இருக்கும். 

கடந்த கால வரலாறுகளில் இருந்து தான் நிகழ்காலத்தை புரிந்து கொள்ள முடியும். அப்போது தான் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். வாக்கு சீட்டு என்பதே, மக்களவை உறுப்பினர்களின் நுழைவுசீட்டு. அதேசமயம் நாம் தேர்ந்தெடுக்க போவது வெறும் ஒரு எம்.பி.யை மட்டுமல்ல, அவர்கள் மூலமாக நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்க போகிறோம்.

”நீங்க, சொல்லுறது எல்லா சரி தான், கோயம்புத்தூருல இருக்குற எங்களுக்கு எதுக்கு டில்லி பாலிடிக்ஸ்?, ஓட்டு கேட்டு வராங்க, நாங்களும் மாறி, மாறி ஓட்டு போட்டோம். ஆனா எதுவும் மாறுலையே?”, ”கோயமுத்தூர்ல இருக்கறதே இரண்டே எம்.பி தொகுதிதான். அதனால என்ன யூஸ்?” என இந்த இடத்தில் நீங்கள் கேட்கக்கூடும். 



கோவை ஒரு அறிமுகம்

’மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதி என ஆங்கிலேயர்களால் குறிப்பிடப்பட்ட கோவை, இன்று இலட்சக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் தொழில் நகரமாக வளர்ந்து நிற்கிறது. இத்தனைக்கும் வற்றாத ஜீவநதிகளோ, வளங்கொழிக்கும் பண்டைய வரலாறோ, பொருளாதார பின்புலமோ, துறைமுகங்களோ இல்லாத ஒரு நிலபகுதியான கோவை, வெறும் 200 ஆண்டுகளுக்குள் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த நகரம் மக்களால் கட்டமைக்கப்பட்டது. அப்படி தான் நாடாளுமன்றமும் மக்களால் கட்டமைக்கப்படுகிறது. கடுகு சிறிதெனுனும், காரம் பெரிது என்பது போல, நாடாளுமன்றத்தில் கோவையின் பங்குமிகப்பெரிது.

அப்படியா?...



* à®šà¯à®¤à®¨à¯à®¤à®¿à®° இந்தியாவில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது கோவைக்காரர் என்பது தெரியுமா?

* à®‡à®¤à¯à®µà®°à¯ˆ மத்திய நிதியமைச்சர்களாக இருந்த 5 தமிழர்களில் 2 பேர் கோவைக்காரர்கள் என்றால் நம்ப முடிகிறதா? 

* à®Žà®³à®¿à®®à¯ˆà®¯à®¿à®©à¯ அடையாளம், à®ªà¯‹à®°à®¾à®Ÿà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ முகம் என கருதப்படும் நல்லகண்ணு கோவையில் போட்டியிட்டது தெரியுமா?

* à®…திமுகவின் கோட்டை என கருதப்படும் கோவையில் ஒரே ஒரு முறை மட்டுமே வென்றது தெரியுமா?, ஆளும் திராவிட கட்சிகள் கோவை தொகுதியில் பெரிதாய் சாதிக்காதது, ஏன்?

இப்படி, அப்படியா என கேட்க வைக்கும் ஆச்சரியங்களோடு, சுவராஜ்யமான அரியதகவல்களோடு, தேர்தல் களம், நாடாளுமன்றத்தில் கோவையின் பங்கு என பல சுவையான தகவல்களை தேடி எடுத்து, உங்களிடம் கொடுக்கிறது.உங்களது ”சிம்பிளிசிட்டியின் 2019 – கோவை தேர்தல் களம்”.

போட்டியின்றி தேர்வான கோவையின் முதல் எம்.பி.யில் இருந்து, முதல் முறையாக வென்ற அதிமுக வரை, கோவையின் வெற்றி தோல்வியை தீர்மானித்த தொழிற்சங்கங்கள் முதல் தீர்மானிக்க உள்ள சக்திகள் வரை, கோவை விரும்பிய கம்யூனிஸ்ட்கள் முதல் பாஜக விரும்பும் கோவை வரை, நல்லகண்ணுவை தோற்கடித்த பாஜக முதல் மோடி அலையை கவிழ்த்த உள்ளடி வேலை வரை, புரட்சி பேசிய கட்சி முதல் கொங்கு பிரிவினை கேட்ட கட்சி வரை, தொடர்ந்து காங்கிரஸ் வென்ற நீலகிரி முதல் மாறி, மாறி திராவிட கட்சிகள் வென்ற பொள்ளாச்சி வரை இத்தொடர் விரிவாக அலச உள்ளது. 

அதேசமயம் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளோடு நின்று விடாமல், நிகழ்கால அரசியலையும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் நிலவரம், எந்த கட்சி போட்டியிடும்? யார் யார் வேட்பாளர்கள்?, வாகை சூடுவது யார் என பலபரிணாமங்களை தொடராக தினமும் பேச வருகிறது. “2019- கோவை தேர்தல் களம்.

தொடர்ந்து இணைந்திருங்கள்….!

Newsletter

உலக மகளிர் தினம்: கோவையின் முதல் பெண் எம்.பி

தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்குமà¯...

பிறந்த குழந்தையும் பசும்பாலும் - ஒரு கண்ணோட்டம்!

பால் என்பது குழந்தைக்கு முதல் உணவு, முக்கிய à®...

2019 - கோவை தேர்தல் களம்: காவி, சிவப்பு மோதல்! வெல்லப்போவது யார்?

கோயம்புத்தூர் மக்களவை தொகுதி முழுவதுமே தொழà®...

2019 - கோவை தேர்தல் களம்: மோடி அலையை கோவையில் கவிழ்த்த உள்ளடி வேலை

கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக போà®...

2019 - கோவை தேர்தல் களம்: மாறிய கோவை தொகுதி, மாறாத மக்கள்

15 வது மக்களவை தேர்தலின் போது கோயம்புத்தூர் தà...